மனதில் தோன்றியது.

நேற்றைக்கு ஆபிசில் பழைய ஆட்கள்(33 வயதிற்கு மேலாகவும் 10 வருடத்திற்கு மேல பணி மூப்பும்) இருவர் பேசிக்கொண்டிருந்தோம்.  நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார் இன்னொருவரின் பெயரைச்சொல்லி ”அந்த காலத்தில் எனக்கும் அவருக்கும் போட்டியே நடக்கும் யார் முதல்ல் வரதுன்னு”. பதிலுக்கு நான் அந்த் காலத்தில க்ரீம்ஸ் ரோடுல ஆபிஸ் இருக்கும் போது நான் ஆபிசுக்கு வரும்போது கடைகளே ரோட்டில் திறந்திருக்காது”.  அப்புறம் நேற்றைக்கு நடந்த டீம் மீட்டிங்கில் உரையாற்றி முடித்த பின்னர் நான் இப்படி முடித்தேன் “எல்லாரும் எப்படி எடுத்துக்குவிங்கன்னு தெரியலை.. இருந்தாலும் சொல்லிடறேன்.. சீக்கிரம் வாங்க.. சீக்கிரம்னா எட்டு ஒன்பது மணிக்கல்லாம் வர சொல்லலை; பத்து மணிக்குதான்”.

ஆச்சா, இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதனால் சில டீம் மெம்பர்களை  மட்டும் சனிக்கிழமை வர்ச்சொல்லியிருக்கிறது. எனக்கு ஒரு மெயில் நேற்றைக்கு இரவு 12.06(அதாவது இன்றைக்கு காலையில்) வந்திருந்தது. அதன் பொருட்டு நான் கிளம்பி 8.10க்கெல்லாம் ஆபிஸ் போய்விட்டேன். நான் போன வேலை 9.10க்கெல்லாம் முடித்தாயிற்று. எனக்கு மெயில் அனுப்பியவருக்கு பதிலும் அனுப்பி திரும்பி அவரை கூப்பிட்டேன். பதில் இல்லை.  உடனே அவரின் மேல்நோக்குநருக்கும் அழைத்தேன். அவர் நான் வீட்டிற்கு திரும்பியவுடன் அழைத்தார். அதாவது ஒரு 10.30க்கு அழைத்தார்.

பழைய ஆட்கள் காலை விடியலிலயே எழுந்து இரவானாலும் ஓடிக்கொண்டே யிருக்கின்றனர். புது ஆட்களின் காலை  மெதுவாகத்தான் ஆரம்பிக்கிறது; இருந்தாலும் அவர்கள் இரவு  எத்தனை மணி நேரமானாலும்(எல்லாரும் கிடையாது சதவிகிதம் கம்மி). உழைக்கின்றனர்.

இருந்தாலும் பழைய ஆட்கள் புலம்பி கொண்டேயிருக்கிறோம். புதுசுங்க சரியில்லை.

இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி.. காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது நல்லதா கெட்டதா ?

Comments

Popular Posts